யாரை குறை கூறப் போகிறீர்கள்? : பிரதமர் மோடிக்கு, ராகுல் கேள்வி

rahul3

இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கறி பற்றாக்குறைக்கும், மின்வெட்டு பிரச்சினைகளுக்கு யாரை குறை கூறப் போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

வழக்கமாக தனது தோல்விகளுக்கு பிறரை குறைக்கூறி வரும் பிரதமர் மோடி, இந்த பிரச்சினைக்கு நேருவை குறை கூறுவீர்களா, மாநில அரசை குறை கூறுவீர்களா அல்லது மக்களைக் குறை கூறுவீர்களா என்று கேட்டுள்ளார்.

மேலும் 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி வாக்குறுதி அளிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்ட அவர், 

2015-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும். மக்கள் மின்வெட்டு, நிலக்கரி பற்றாக்குறை போன்ற வார்த்தைகளை செய்தி தலைப்புகளில் பார்க்கவே மாட்டார்கள் என கூறியிருக்கிறார். ஆனால், நடந்தது என்னவே வேறு ஒன்றாக இருக்கிறது. 

பிரதமரின் வாக்குறுதிகளும் நோக்கமும் எப்போதும் துண்டிக்கப்பட்டே இருக்கிறது என கூறியுள்ளார்.

இத்துடன், 'தொழிலதிபர் ஒருவர் மின்வெட்டு பிரச்சினையால் இரவில் தூங்க முடியவில்லை' என புலம்பும் வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
*

Share this story