நாட்டில் பயங்கரவாதிகளை உருவாக்கி, வளர்த்தது யார்? : மத்திய வெளியுறவுத்துறை பதில்

jai1

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவும் உலகமும், மோடி சகாப்தத்தில் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பாகிஸ்தானை போல வேறு எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததில்லை. இந்த வகையான நடத்தை மற்றும் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தது என்பதை நீங்கள் உலகிற்கு எப்படி காட்டுவீர்கள்.

நரேந்திர மோடி அரசு, இராஜ தந்திர நடவடிக்கையால் மற்ற நாடுகளையும் (பாகிஸ்தான்) பயங்கரவாத பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வைத்துள்ளது. இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணராக கருதப்படுகிறது. அண்டை நாடு (பாகிஸ்தான்) சர்வதேச பயங்கரவாதத்தில் நிபுணராக அறியப்படுகிறது.

பயங்கரவாதம் இப்போது கட்டுப்படுத்தப்படா விட்டால் எதிர்காலத்தில் அவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா வெற்றிகரமாக உணர்த்தி உள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த போரில் உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு முன், இது வேறு எங்கோ நடப்பதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என நினைத்து, மற்ற நாடுகள் இதை புறக்கணித்தன.

இன்று, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் (பாகிஸ்தான்) மீது அழுத்தம் உள்ளது. இது எங்களின் இராஜதந்திர நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share this story