சாமானியர் யார்? ஓபிஎஸ்ஸா..ஈபிஎஸ்ஸா? : மருது அழகுராஜ் விளக்கம்

marudhu32

எடப்பாடி சாமானியராம்..பார்ர்ராரா..!

சகல துறைகளையும் சம்பந்தி துறைகளாக்கி, நாலாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் சிக்கி, நீதி மன்றத்தில் தலை தப்புமா என தவம் இருக்கும் தவழ்ந்தசாமி சாமானியரா.?

எம்.ஜி.ஆர். கட்சியை ஏலத்தில் எடுக்க என்னால் மட்டுமே முடியுமென, கத்தை பணத்தை கட்டிக் கொண்டு
அலைகிற கரன்சி குடோன் உரிமையாளர் சாமானியரா.?

முன்மொழிய ,பத்துமாவட்ட செயலாளர் வழிமொழிய.. பத்து மாவட்ட செயலாளர்..

இப்படி, பத்து இரண்டு இருபது பண்ணையார்களை..

ரொக்கத்தால் விலைபேசி முடிக்கிற சக்திபடைத்த குத்தகைக்காரர் பழனிச்சாமி சாமானியரா.?

கொரானா முதல், கொடநாடு வரை, விளைச்சல் பார்த்த கூவத்தூர் வியாபாரி சாமானியரா.?

சதிகாரன் என்று சொன்னா,, அது சத்தியம், சண்டாளன் என்று சொன்னா அது சரித்திரம்.

சாமானியன் என்று சொன்னா.. பூலோகம் ஏற்குமா.? பொன்னையன் தான் ஏற்பாரா.?

இவ்வாறு தெரிவித்துள்ள மருது அழகுராஜ், மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  குறித்தும், அதிமுக கொள்கை குறித்தும் தெரிவித்துள்ளதாவது :

உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதற்கு, ஜல்லிக்கட்டு உரிமையை எழுபத்தி இரண்டுமணி நேரத்தில் மீட்டெடுத்து, ஒன்பதாண்டு காலம் பூட்டிக் கிடந்த வாடிவாசல் திறந்துவிட்ட வரலாற்றை படைத்ததும்...

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து திரும்புவதற்குள்..

கிருஷ்ணா நதிநீர் தமிழகத்தின் எல்லைக்கு வந்தடைந்த சரித்திரம் படைத்ததும், ஆவண சாட்சிகள்.

அதுபோல, கடமையில் தவறாதவர் என்பதற்கு.. வர்தாபுயல் வந்தபோது, வரிந்து கட்டிய வேட்டியோடு புரிந்த தொண்டும்..

கஜா புயல் சுனாமி காலத்தில் அம்மாவின் தொண்டராக அவர் ஆற்றிய பணிகளும் கல்வெட்டு சான்றுகள், காலத்தால் அழியாத மாண்புகள்..

அவர், விசுவாசம் நிறைந்தவர் என்பதற்கு....

ஒப்படைத்த அதிகாரத்தை உரியவர்களிடம் சேதாரம் இல்லாது சேர்ப்பித்த கழகத்தின் பரதன் என காவியத் தாய் தந்த சான்று.. கண் முன்னே உலவும் கற்கண்டு நிகழ்வுகள்..

எடப்பாடி பணத்துக்கு மயங்காது, ஒப்பில்லா தொண்டர் கூட்டம்,

எதற்காக,ஓ.பி.எஸ். பக்கமா ஒதுங்குது என்பது இப்போது புரிகிறதா..

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story