குஜராத், இமாசலப் பிரதேச மாநிலங்களில் ஆட்சி அமைக்கப் போவது யார்? : கருத்துக் கணிப்பில் தகவல்..

By 
election5

* இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதேபோல் குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் வரும் 8ந் தேதி வெளியாகின்றன. இந்நிலையில் இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று டிவி9 குஜராத்தி மற்றும் ரிபப்ளிக் டிவி, நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இதேபோல் டைம்ஸ் நவ், நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பிடிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

* டெல்லி மாநகராட்சியில் உள்ள மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விபரம் வருமாறு:

ஆஜ் தக் செய்தி நிறுவனம்:- ஆம் ஆத்மி 149 முதல் 171 இடங்களில் வெற்றி பாஜக - 69 முதல் 91 இடங்களில் வெற்றி காங்கிரஸ் - 3 முதல் 7 இடங்களில் வெற்றி

நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம்:- ஆம் ஆத்மி - 159 முதல் 175 இடங்களில் வெற்றி பாஜக - 70 முதல் 92 இடங்களில் வெற்றி காங்கிரஸ் - 4 முதல் 7 இடங்களில் வெற்றி.

டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம்:- ஆம் ஆத்மி - 146 முதல் 156 இடங்களில் வெற்றி பாஜக - 84 முதல் 94 இடங்களில் வெற்றி காங்கிரஸ் - 6 முதல் 10 இடங்களில் வெற்றி.

பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு அடிப்படையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.
*

Share this story