அதிமுக.வின் பிறப்பு நோக்கத்தை நிறைவேற்றுபவர் யார்? : மருது அழகுராஜ் விளக்கம்
 

marudhu55

அண்ணா தி.மு.க.வின் பிறப்பு நோக்கத்தை யார் நிறைவேற்றி வருகிறார்.. ஓபிஎஸ்ஸா? ஈபிஎஸ்ஸா? என்பதற்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :

கோடி கோடியாக குவித்து வைத்திருக்கும் குறுநில மன்னர்களை கூட்டி வைத்துக் கொண்டு, ஒருவகை கிழக்கிந்திய கம்பெனி நடத்துகிறார் சிலுவம்பாளையத்து வைஸ்ராய் பழனிசாமி.

அந்த கம்பெனியில், பெருந்தொகை வைத்திருப்பவர்கள் மட்டுமே, அங்கு பெருந்தகைகளாக மதிக்கப்படுவர்.

ஆனால், ஏழை எளியோரது கைகளில் அரசியல் அதிகாரம் என்னும் அண்ணா, புரட்சித் தலைவர் ஆகியோரது கனவையும்..

பாமரரும் பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியம் பெற வேண்டும் என்னும் புரட்சித்தலைவி அம்மாவின் லட்சியத்தையும்.. ஓ.பி.எஸ் மட்டுமே நனவாக்குகிறார்.

வாய்ப்பு மறுக்கப்பட்டு கிடந்தவர்கள் திறமையாளர்கள் என மறைந்து கிடந்த வைரங்களுக்கெல்லாம் வாய்ப்பு தந்து அண்ணா தி.மு.க.வின் பிறப்பு நோக்கத்தை நிறைவேற்றி வருகிறார்.

இவ்வாறு அதிமுக செய்தித்தொடர்பாளர்  கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story