பொத்திக்கொண்டு, பூங்கொத்தோடு நின்றது ஏன்? : ஈபிஎஸ்.க்கு, ஓபிஎஸ் தரப்பு கேள்வி

marudhu38

தமிழகம் வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சந்தித்தனர். அப்போது, அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை. 

இந்நிலையில், தனியார் நிகழ்ச்சிக்காக இன்று சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.

தனிப்பட்ட முறையில் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடைபெறவில்லை. நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தமாக இருவரும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். 

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின்னர் அமித்ஷா, பாஜக அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். 

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தது சந்தித்தது மகிழ்ச்சிகரமாகவும், திருப்திகரமாகவும்
இருந்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை அமர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வை சுட்டிக்காட்டி, அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் எழுப்பியுள்ள கேள்வி வருமாறு :

'ஓ.பி.எஸ் அருகிலேயே உட்கார மாட்டேன்' என அப்பாவு சபாநாயகரிடம் அடம்பிடித்த எடப்பாடி,

இப்ப மட்டும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.க்கு அடுத்துதான் உனக்கான
இடம் என்ற போதும், பொத்திக்கொண்டு பூங்கொத்தோடு நின்றது ஏன்.?

தனது அரசியலே காலாவதி ஆகிவிடும் என்ற அச்சத்தாலா?

இல்லை, அபகரிப்பு
முயற்சி அம்பேல் ஆகிப் போனதாலும், அதனை ஆதரிக்காத பா.ஜ.க.வை பல்லைக்
காட்டி ஏமாற்ற நடத்துகிற பம்மாத்தா.?

சொல்லுங்க
மிஸ்டர் தவழ்ந்த சாமி..

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this story