பொல்லாத ஆட்சி.. பொன்முடியே சாட்சி : மருது அழகுராஜ் குற்றச்சாட்டு 

marudhu29

'தி.மு.க.ஆட்சி நாட்களை கடத்துகிறதே தவிர, நல்லாட்சி நடத்தவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வழக்கமான அடையாளங்களான சட்டம் ஒழுங்கு சீரழிவு விலைவாசி ஏற்றம் மக்களை அவமதிக்கும் மந்திரிகளின் போக்கு, எல்லாமும் இப்போது முழுச் சந்திரமுகியாகி முகம் சுழிக்க வைக்கின்றன' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித்தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, கவிதைநடையில் அவர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு :

*மனுவாங்கி
போன
பொட்டி
என்னாச்சு..

மாதம்
மகளிருக்கு
ஆயிரம் 
என்னாச்சு..

மாதாந்திர
மின்
கணக்கெடுப்பு
என்னாச்சு..

மாணவர்
கல்விக் கடன்
ரத்து
என்னாச்சு..

பழைய
ஓய்வூதியம்
என்னாச்சு..

பல லட்சம்
பேருக்கு
வேலை
என்னாச்சு..

நீட்டுக்கு
விலக்கு
என்னாச்சு

நீட்டி முழங்குன

மது விலக்கு
என்னாச்சு..

சிலிண்டர் மானியம்
என்னாச்சு..

* இது போக,

தாலிக்கு
தங்ம் 
நின்னாச்சு ‌

கல்யாண
உதவிதொகை
நின்னாச்சு

மினி கிளினிக்
நின்னாச்சு

அம்மா
உணவகம்
நின்னாச்சு..

* மொத்தத்தில்

விடியல்
ஆட்சி
என்பதெல்லாம்

வெள்ளநீர்
வடியா
ஆட்சி 

ஒருவருக்கும்
விடியா 
ஆட்சி
என்பது தான்

நிதர்சனம் என்றாகி விட்டதால்..
திமுக.க.வினரும் அதன் மக்கள் பிரதிநிதிகளும்

பொதுமக்களை கண்டு அஞ்சுகிற நிலையும்..
பொன்முடியை போல முறை தவறி

மக்களிடமே மோதுகிற நிலையும் உருவாகி வருகிறது..

ஆக..ஆப்பசைத்த குரங்கின் நிலை தான்

ஆளும் தி.மு.க.வின் சம காலச்சூழல்..

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*

Share this story