அதிமுக மெகா கூட்டணியில் பாமக இணையுமா? அன்புமணி ராமதாஸ் பதில்
 

anpumani

* சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியில் இருப்பீர்களா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம்" சட்டப்பேரவை தேர்தலுக்கு தேவையான வியூகங்களை 2024ல் வகுப்போம் என கூறினார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வு.டன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாமக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றார்.

* அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு வருகிற நவம்பர் 30-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நவம்பர் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். அதற்குள் விளக்க மனு தாக்கல் செய்யவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
*

Share this story