காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் : சோனியா பேச்சு

sonia

காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு (சிந்தனை அமர்வு) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கியது. 

தொடக்க நாளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது :

கட்சி நிர்வாகிகள் திறந்த மனதுடன் விவாதித்து, கட்சியை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும். 

இந்த சிந்தனை அமர்வானது, நமக்கு முன்னால் உள்ள பல சவால்களைப் பற்றி ஆலோசிக்கவும், அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரவும் ஒரு வாய்ப்பாகும். 

குறிப்பாக, தேசிய பிரச்சனைகள் மற்றும் கட்சி அமைப்பு பற்றிய அர்த்தமுள்ள  சுயபரிசோதனை குறித்து விவாதிக்கப்பட வேண்டும். 

கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட லட்சியங்களுக்கும் மேலாக, கட்சி அமைப்பை வைத்திருக்க வேண்டும். 

கட்சி நமக்கு நிறைய கொடுத்துள்ளது, அதை திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் இது. கட்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டியது காலத்தின் தேவை. இதற்கு, நாம் நமது செயல்முறையை மாற்ற வேண்டும்.

பிரதமர் மோடியும் அவரது ஆதரவாளர்களும் அடிக்கடி பயன்படுத்தும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ என்ற முழக்கத்தின் உண்மையான அர்த்தம், 

சிறுபான்மையினரை கொடூரமாக நடத்துவதும், அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதும் என்பது தெளிவாகிவிட்டது' என்றார்.
*

Share this story