வெற்றி ஈட்டுவதா? வெல்லம் உருட்டுவதா? : எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கேள்வி

marudhu

அதிமுகவில் நிகழும் பரபரப்பான நிகழ்வையொட்டி, முன்னதாக நமது எம்ஜிஆர் பத்திரிகை ஆசிரியராக இருந்தவரும், பின்னர் அரசியல் மாற்றத்தால் நமது அம்மா பத்திரிகை நாளிதழ் ஆசிரியராகவும், அதிமுக செய்தி தொடர்பாளராகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் கவிஞர் மருது அழகுராஜ். 

தற்போது, இவர் நமது அம்மா பத்திரிகையில் இருந்து விலகி நின்றாலும், அதிமுக தொண்டர்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

அவ்வகையில், அவர் கனன்றிருக்கும் அறிக்கை வருமாறு :

மிஸ்டர் சிலுவம்பாளையம் ..
நல்லா இருந்த கட்சியை உடைச்சு அதை சிலுவையில் ஏத்திப்புட்டு

புதுடெல்லிக்கு புறப்பட்டு போனீங்களே... அங்கே என்ன நடந்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உம்மையெல்லாம் ஒரு தலைவனா கவே அவர் மதிக்கலைங்கிறது, புகைப்படங்களில் உள்ள  அவரது உடல் மொழியிலயும் நீங்க வெளியே வந்தபோது இருந்த உங்க மூனு பேரோட மொகரக் கட்டையிலேயும்தெளிவா தெரிஞ்சிடுச்சு. 

மிஸ்டர் தரைப்பாடி ..

புரட்சித் தலைவியின் போயஸ் தோட்டத்து வாசல்ல தேசிய அரசியல் காத்துக்கிடந்ததுன்னா, காரணம் என்ன தெரியுமா கட்சியை அவர் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக வச்சிருந்ததே.   

ஆனா ..நீங்களோ  உடைச்சு நொறுக்கிவிட்ட சிலையை தூக்கிகிட்டு, நானும் சிற்பி தான்னு டெல்லிக்கு கடை போட போனீங்க..விடை என்ன ஆச்சு;  மானம் போச்சு, மரியாதை போச்சு.

ஆளானப்பட்ட புரட்சித் தலைவரே தன் மீது கவர்னரிடம் ஊழல் பட்டியல் கொடுத்த நமது கழகம், எஸ்.டி.எஸ் ஐ சமாதானம் செஞ்சு கட்சியை ஒன்று படுத்திக் கொண்டாரு..

அது போலவே, போட்டி அண்ணா திமுக நடத்திய திருநாவுக்கரசை கட்சியில் சேர்த்துக் கொண்டு 98 ல் 30 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று, இந்திய அரசியலையே தன் இமை அசைவில் வைத்திருந்தவர் புரட்சித் தலைவி அம்மா.

வேனும்னா அந்த ரெண்டு கட்சிகளுக்கும் போய் வந்த ராஜன் செல்லப்பாகிட்ட
கூடுதல் விபரத்தை கேட்டுத் தெரிஞ்சிக்கோங்க..

இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல..

அபகரிப்பு முயற்சியை கைவிட்டுட்டு, தொண்டர்களிடமும்  கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸிடமும் மன்னிப்பு கேளுங்க.

 கூட்டுத் தலைமை அமைச்சு, வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல்ல வெற்றி பெறப் பாருங்க..

அதை விட்டுட்டு, மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னு; முனுசாமி, சண்முகம், ஜெயக்குமார் போன்ற  தவறான ஆட்கள் போடுற சாம்பிராணிக்கு சாமி ஆடுனா.. கடைசியில் பழைய பழனிச்சாமியா நீங்க மறுபடி வெல்லம்  உருட்டத் தான் போகனும்....

புரியுதா...

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story