அண்ணாமலை ஆபீசருக்கு ஒரு கேள்வி : ஓபிஎஸ் தரப்பு சவால்
Tue, 14 Mar 2023

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, சவாலாய் விடுத்துள்ள கேள்விக்கணை வருமாறு :
'எல்லாவற்றுக்கும் எதிர்வினை உண்டு' என அண்ணாமலை ஆபீசர் சொன்னீங்களே...
அப்படி என்றால், உங்களை '420-மலை' என்று சொன்ன நிர்மல் குமாரை எடப்பாடி தன் கட்சியில சேர்த்துக்கிட்டது போல..
எடப்பாடிய துரோகின்னு, நாக்கை புடிங்கிக்கிட்டு சாகுறாப்ல, நேருக்கு நேர் நின்றுகேட்ட யோகேஷ்வரன் ராஜேஸை பா.ஜ க.வுல சேர்க்க முயற்சிப்பிங்களா.?
சொல்லுங்க ஆபீசர் சொல்லுங்க..
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ், கேள்வி எழுப்பியுள்ளார்.