ராகுலை பற்றி, முழுமையான விவரங்களை என்னால் சொல்ல முடியும் : குலாம் நபி ஆசாத்

aasad

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்ள குலாம்நபி ஆசாத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி தொழில் அதிபர் அதானியுடன் தொடர்பு வைத்திருப்பதாக ராகுல் காந்தி சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவரும் அவரது மொத்த குடும்பமும் நாட்டின் விரும்பத்தகாத ஒரு தொழில் அதிபருடன் தொடர்பில் உள்ளனர்.

இதை என்னால் ஆதாரபூர்வமாக சொல்ல முடியும். ராகுல் காந்தி எங்கெங்கு போகிறார், யாரை சந்திக்கிறார் என்று என்னால் முழுமையாக சொல்ல முடியும். வெளிநாட்டுக்கு போய் அவர் யாரை சந்திக்கிறார் என்று என்னால் ஆதாரத்துடன் தகவல் தர முடியும்.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இல்லை. அந்த கட்சியில் சில தனிநபர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.அவர்களுக்கும் செல்வாக்கு இல்லை. பாத யாத்திரை நடந்து விட்டதால் ராகுல் காந்திக்கு செல்வாக்கு அதிகரித்து விட்டதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி எந்த செல்வாக்கும் ராகுலுக்கு அதிகரித்து விட்டதாக எனக்கு தெரியவில்லை. சூரத் கோர்ட்டுக்கு அவர் சென்ற போது ஒருவர் கூட அவரை வரவேற்கவில்லை.

இதிலிருந்தே அவரது எம்.பி. பதவி பறிப்பை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறி உள்ளார்.

Share this story