ஒமைக்ரான் பரவலுக்கு நடவடிக்கை; 5 மாநில தேர்தல் தள்ளிவைப்பு? : பிரதமர் மோடி ஆலோசனை

Action for omega-3 diffusion; 5 state election postponement  Advice from Prime Minister Modi

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மத்திய அமைச்சர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் காலம் :

5 மாநில சட்டசபைத் தேர்தல் மற்றும் ஒமைக்ரான் பரவல் குறித்து, இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. 

தேர்தலைத் தள்ளி வைக்கலாமா? அல்லது மேலும் முன்னெச்சரிக்கையுடன் நடத்தலாமா என்பது குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த, மாநில அரசுகள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, அரியானா, மத்திய பிரதேசம், அசாம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.

ஜனவரி 3-ந் தேதி முதல் 15 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

ஜனவரி 10-ந்தேதி :

ஜனவரி 10-ந் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது.

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி ஆகியவை குறித்தும் மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
*

Share this story