அதிரடி திருப்பம்.! காங். மாவட்ட தலைவர் எழுதிய மேலும் 2 கடிதம் சிக்கியது..

By 
njk2

நெல்லை மாவட்ட காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 2 நாட்களாக காணவில்லையென காவல்நிலையத்தில் அவரது மகன் நேற்று புகார் செய்திருந்தார். மேலும் ஜெயக்குமார் தன்சிங் மாவட்ட எஸ்பிக்கு எழுதிய கடிதத்தையும் புகாரோடு சேர்த்து வழங்கியுள்ளார்.

அதில்  சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் தலைவர் தங்கபாலு மற்றும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல் தமிழக அரசியல் வட்டாரமே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில்  போலீசார் ஜெயக்குமாரை தேடி வந்த நிலையில், ஜெயக்குமாரின் தோட்டத்தில் ஒருவர் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் இறந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறுதியாக இந்த உடல் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் என தெரியவந்தது. எனவே ஜெயக்குமார் மரணசம் கொலையா.? தற்கொலையா என போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஜெயக்குமார் எழுதியதாக மேலும் இரண்டு கடிதம் கிடைத்துள்ளது.

அதில் தனது மருமகன் ஜெயபாலுக்கு எழுதிய கடிதத்தில், தனக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான பணம் தொடர்பாக 14 பேர் கொண்ட பட்டியலை  குறிப்பிட்டுள்ள ஜெயக்குமார், தான் திருப்பி அளிக்க வேண்டிய பண விவரங்களையும் ஜெயக்குமார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இடிந்தக்கரையை சேர்ந்த ஒருவருக்கு  ரூ.10 லட்சம் திரும்ப கொடுக்க வேண்டும் என்றும்,நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியனிடம் ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு, காசோலையை திரும்பப் பெற வேண்டும் தெரிவித்துள்ளார். அந்த கடிததத்தில், தனது சொத்து தொடர்பான தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் மற்றொரு கடிதத்தில், மகள் கத்ரீன் திருமணத்தை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி என உருக்கமாக குறிப்பிட்டவர், தனது பிரச்சினையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம், சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் இறந்தது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Share this story