தென்கொரியா தூதருடன், நடிகர் ராம்சரண் குத்தாட்டம்..

rrrr

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்.) 'நாட்டு நாட்டு' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்ததற்கு அதன் நடனமும் ஒரு காரணமாகும்.

ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் போட்டி போட்டு ஆடிய இந்த பாடலுக்கு அதே ஸ்டெப்புகளை போட்டு ரீல்ஸ்களை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பகிர்ந்தனர். 'நாட்டு நாட்டு' பாடலுக்கு தென்கொரியாவிலும் அதிக வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியாவிற்கான தென் கொரிய தூதர் ஜாங் ஜே போக், ஆர்.ஆர்.ஆர். படத்தின் கதாநாயகன் ராம் சரணுடன் மேடையில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Share this story