அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூக்கு, நடிகை த்ரிஷா எச்சரிக்கை..

By 
avraju

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.கே.ராஜூ. இவர் சமீபத்தில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதனையடுத்து ஏ.கே.ராஜூ கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் ஆவேசமடைந்த ஏ.கே.ராஜூ,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மோசமாக விமர்சித்திருந்தார்.பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறினார். 

அப்போது கடந்த 2017ஆம் ஆண்டு கூவத்தூரில் உள்ள ரிசாட்டில்  தங்கவைக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு மது மற்றும் பெண்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அவதூறான கருத்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார்.

ராஜுவின் பேட்டி குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி நிலையில் அரசியல் கட்சியினர், திரைத்துறையின் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இதனையடுத்து நடிகை திரிஷா தன்னை பற்றி கூறிய அவதூறாக பேசிய விவகாரத்தில் ஏவி ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு 24 மணி நேரத்தில் கேட்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் பிரபலமான youtube பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் மன்னிப்பு கேட்கப்பட்ட வேண்டும் என கூறியுள்ளார். ஏ.வி.ராஜூவின் கருத்தினால் கடந்த நான்கு நாட்களாக மன உளைச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

இதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் கேட்டுள்ளார். தன்னைப் பற்றி அவதூறு தொடர்பான செய்திகள் எந்தெந்த யூடியூப் சேனல்கள், பத்திரிகைகள் மற்றும் டிவிகளில் வந்ததோ அவை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த வழக்கறிஞர் நோட்டீஸில் கூறியுள்ளார். மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை மேற்கொள்ளாவிடில் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வழக்கறிஞர் நோட்டீஸ் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share this story