தொண்டர்கள் விழிப்படைந்தால் மட்டுமே அ.தி.மு.க. பிழைக்கும் : மருது அழகுராஜ் பார்வை 
 

marudhu98

'சாதி வெறியும் ஜல்லி மெசினும்' என்கிற தலைப்பில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

அன்று பொன்னையன் "கவுண்டர் சாதி எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் தங்கமணி, வேலுமணி வசம் இருக்காங்க" "வன்னியர் சமூக எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் சி.வி.சண்முகம் வசம் இருக்காங்கன்னு பேசுனாரு...

அடுத்த சில நாட்களில், செங்கோட்டையனோ "நானும் ஒரு கவுண்டர், எடப்பாடியும் ஒரு கவுண்டர். ஆக மொத்தத்தில் ஒரு கவுண்டர் தான் தமிழ்நாட்டை ஆள முடியும்ன்"னு பேசுனாரு...

இப்ப அதெல்லாத்துக்கும் ஒரு படி மேலே சென்று, எடப்பாடி தன்னோட கவுண்டர் சாதியின் உட்பிரிவை சுட்டிக் காட்டி ஈரோட்டு கிழக்கு தொகுதியில் உள்ள தன்னோட சாதி சனத்துக்கு லெட்டரே போட்டிருக்காரு. (லெட்டர் பொய்யின்னா வழக்கு போடு.)

ஆக, புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா.. சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக கட்டிக் காத்த ஒரு சமத்துவ இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி என்கிற அதிகார மனநோயாளி, சாதி வாரியாக மண்டலங்கள் வாரியாக சிதறடிக்கிற காரியத்தை செஞ்சிக்கிட்டு வருது.

இந்த ஜல்லி உடைக்கிற மெசினை இன்னும் சில லூசுகள் சிற்பின்னு நம்பிக்கிட்டு அலையுறதுதான் பரிதாபம்.

ஏற்கனவே கட்சியில் வழிகாட்டும் குழு போடுறப்ப.. யாதவ சமூகத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன்; தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்ந்த சோழவந்தான் மாணிக்கம்; பிள்ளைமார் சமூகம் சார்ந்த சங்கராபுரம் மோகன்; நாடார் சமூகத்தை சேர்ந்த மனோஜ்பாண்டியன்; வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஜே.சி.டி.பிரபாகர்னு..

அனைத்து சமூகங்களை சார்ந்தவர்களுக்கும் தன் தரப்பில் வாய்ப்பு கொடுத்தவர் ஓ.பி.எஸ். முக்குலத்துக்கொரு வாய்ப்பு தரவில்லையே என சிலர் கேட்டபோது, அதற்குதான் நான் இருக்கேனே என சமாதானப்படுத்திய பண்பாளர் ஓ.பி.எஸ்.

ஆனா, தன் தரப்பில் அதே தங்கமணியையும் வேலுமணியையும் கட்டி, கழுதவர் தான்.. இந்த எடப்பாடி ..

ஆக, புரட்சித்தலைவர் படைத்த இயக்கத்தை, புரட்சித்தலைவி காத்த இயக்கத்தை எடப்பாடி என்கிற அதிகார பித்தன் அழிக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டு, தொண்டர்கள் விழிப்படைந்தால் மட்டுமே அண்ணா தி.மு.க. என்கிற பொன்விழா கண்ட இயக்கம் பிழைக்கும்.

இல்லையேல், ஆக்கியவர் எம்.ஜி.ஆர்; அழித்தவன் எடப்பாடி என்னும் வரலாற்றோடு அது காலாவதியாகிவிடும் என்பது சத்தியம்.

எனவே, சாதி மதம் கடந்து சமன்படுவோம். சத்தியத்தாய் காட்டிய அடையாளமாம் உத்தமத் தலைவர் ஓ.பி.எஸ் தலைமையில் கழகத்தை கட்டிக் காத்திட சபதம் ஏற்போம்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 
 

Share this story