அதிமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்.? - ராஜன் செல்லப்பா பரபரப்பு தகவல்..

By 
vvrr

அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் எப்போது வேண்டுமெனாலும் நடக்கலாம்” என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான விவி.ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349-வது சதய விழாவையொட்டி வியாழக்கிழமை மதுரை ஆணையூரில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெண்கல சிலைக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் சொல்லப்பா,

“அதிமுகவுக்கு பழனிச்சாமி ஒற்றை தலைமையாக, ஒப்பற்ற தலைமையாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைமையாக செயல்படுகிறார். அதிமுகவை கட்டிக் காக்கின்ற பெரும் முயற்சியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஜெயலலிதாவைப் போல பழனிசாமி அதிமுகவை காக்க பணியாற்றி வருகிறார். அதிமுக தலைமை மாற்றம் என்று ஊடகங்களில் வரும் செய்தி தவறானவை. மக்களவைத் தேர்தலுக்காக அல்ல, அதிமுகவில் மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் வேண்டுமானாலும் பதவி கொடுப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

Share this story