அதிமுக செய்த அநியாயத்திற்கு, விசாரணைக் கமிஷன் வைத்து தண்டிக்கப்படுவர் : முதல்வர் அறிவிப்பு

By 
AIADMK will be punished for injustice done by the Commission of Inquiry Chief Minister's announcement

சென்னை கொளத்தூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது 'மழை நீர் வடிகால் அமைத்ததில், நடந்த முறைகேடுகளை விசாரணைக் கமி‌ஷன் அமைத்து கண்டுபிடிப்போம் என்று அறிவித்தார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது :

* கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட நாளை (திங்கட்கிழமை) செல்லலாம் என முடிவு செய்துள்ளேன்.

* மொத்த சேதக் கணக்கு வந்த பிறகு, அதை தயார் செய்து பிரதமருக்கு அனுப்பி வைப்போம். தேவைப்பட்டால், இங்கு இருக்கிற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமரிடம் நேரடியாக சென்று கோரிக்கைகளை வைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மேலும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, ' நான் அதைப்பற்றி கவலைப்படுவது கிடையாது. என்னுடைய வேலை மக்களுக்கு பணியாற்றுவது. 

ஓட்டுப் போட்டவர்கள் மட்டுமல்ல, ஓட்டுபோடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வதுதான் எனது கொள்கை. அந்த வழியில், எங்களது பயணம் இருக்கும்.

எதிர்க்கட்சிகள் என்ன புகார் செய்தாலும், அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. 

அவர்கள் செய்த அக்கிரமத்தை, அநியாயத்தை மழை முடிந்த பிறகு, அதற்கென்று விசாரணைக் கமி‌ஷன் வைக்கப்பட்டு, எங்கெங்கு தவறுகள் நடந்துள்ளது என்பதை கண்டறிந்து யார் குற்றவாளிகளோ, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்றார்.
*

Share this story