அதிமுக 'திடீர்' திருப்பங்கள் : மருது அழகுராஜ் சாட்டையடி கேள்விகள்..

marudhu104

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள்  வருமாறு :

* ஈரோட்டு கிழக்கு இடைத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, இந்த தீர்ப்பு வந்தால்தான் எடப்பாடியை நோக்கி  அ.தி.மு.க.வை நகர்த்த முடியும்.

ஒரு வேளை, ஈரோட்டு கிழக்கு தேர்தலில் எடப்பாடியை பின்னுக்குத் தள்ளி, சீமான் முன்னிலை பெற்றாலோ அல்லது எடப்பாடி தரப்பு கட்டுத்தொகையை  இழந்து விட்டாலோ, அதன்பிறகு வரும் தீர்ப்பு என்பது பயனற்று போய் விடும் என்பதை கணக்குப் போட்டு, விரும்பிய தீர்ப்பை விரும்பிய நாளில் பெற்றிருக்கிறது எடப்பாடியின் பணப்பெட்டி தரப்பு.

எப்படி 2017 ல் திருமதி சசிகலா, அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு, ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரும் கடிதம் கொடுத்துவிட்ட நிலையில்..ம் ஆளுநர் ஓடி ஒளிந்து கொண்டு விட..

அன்றும் இதேபோல, விரும்பிய தீர்ப்பை விரும்பிய வேகத்தில் பெற்று, அன்று சசிகலாவின் சகாப்தம் முடிக்கப்பட்டது.

அதே சூழ்ச்சி, அதே திட்டம், அதே உச்ச நீதிமன்றம்.. என்பதையெல்லாம்  கண் முன்னே 
நிறுத்திப்பாருங்கள்; எல்லாமும் புரிந்து விடும்.

* எச்.ராஜா சொன்ன அத்தகைய  நீதிமன்றங்களை மட்டுமே கட்டி அழாமல், மக்கள் மன்றத்திடம் முறையிடுவோம்.

வெறும் வாக்களிக்கும் கூட்டமாக மட்டுமே நம்மை வைத்திருக்க வேண்டும் என திட்டமிட்டு, அவர்கள் நடத்துகிற தலைமை அழிப்புக்கு தக்கபாடத்தை  புகட்டவும் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு முட்டையை மட்டுமே பரிசளிக்கவும் முடிவெடுப்போம்.

காட்டி கொடுத்த கருங்காலிகளுக்கு தக்க விருந்து படைப்போம்.

கோபத்தை சேமித்து வை. காலம் வரும்.

* நீதி மன்றங்களில் எடப்பாடி எது கேட்டாலும் கிடைக்குதே எப்படி?

அதுவும் விசாரிக்கும்போது, அது நொட்டை இது நொட்டைன்னு எடப்பாடி தரப்பை திட்டிப்புட்டு, கடைசியில
தீர்ப்பை மட்டும் அந்த எடப்பாடி உத்தமனுக்கு சாதகமாவே எழுதுறாங்களே எப்படி?

கோர்ட்டுக்கு போறதும், பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போறதும் ஒரே மாதிரி இருக்குல்ல.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 
 

Share this story