அனைத்துக் கட்சிக் கூட்டம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
 

By 
All-Party Meeting Announcement by Chief Minister Stalin

தமிழக சட்டசபை நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. 

இதையடுத்து கூடிய சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், சட்டசபையை 2 நாட்கள் நடத்துவது என்றும் சபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக, சபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதில், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர்.

இதற்கிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக, நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

நீட் தேர்வு விவகாரத்தில் எள் முனையளவும் பின்வாங்கப் போவதில்லை என்றும், அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து  அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சி குழுவை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story