கண்ணைக் கட்டிக் கொண்டு உறியடித்து விளையாடிய அன்புமணி.. வைரலாகும் நிகழ்வு 

By 
uri

விவசாயத்திற்கும், தமிழரின் மாண்பையும் பெருமைப்படுத்தும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை பொதுமக்கள் வணங்கி பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.

இதனையொட்டி மாட்டுப்பொங்கல், கானும் பொங்கல் என தொடர் கொண்டாட்டங்கள் நடைபெறும். அந்த வகையில் பல்வேறு கிராமங்களில் விளையாட்டுப்போட்டி நடத்தி பரிசுகளை வழங்குவார்கள். இதே போன்று பாமக தலைவர் அன்புமணியும் பொங்கல் கொண்டாட்ட விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோர் குடும்பத்தோடு தைலாபுரம் தோட்டத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்த வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸ் பொங்கல் பண்டிகையையொட்டி தங்களது குடும்பத்தோடு விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அன்புமணிக்கு அவரது மகள் கண்ணை கட்டிவிடுகிறார். இதனை தொடர்ந்து கண் தெரிகிறதா இல்லையா.? என கண்டு பிடிக்க சிறுமி ஒருவர் கையில் விரல்களை காட்டி எத்தனை என கேட்கிறார்.

இதற்கு சரியாக தெரியவில்லையென அன்புமணி கூறுகிறார். இதனை தொடர்ந்து அன்புமணியை சுற்றி விடும் மகள், இதனை தொடர்ந்து தோட்டத்தில் கட்டப்பட்ட உறியை அடிக்க தட்டித்தடுமாறு மெதுவாக செல்லும் அன்புமணி கடைசியில் குறியை அடித்து உடைத்து விடுகிறார். இந்த விடியோ தான் தற்போது சமூகவலைதளத்தில் பரவி வருகிறது 

Share this story