ஆந்திராவின் தலைநகர் மாற்றம் : முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு
Tue, 31 Jan 2023

* ஆந்திர மாநிலத்தின் தலைநகர் மாற்றம் செய்து ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே தலைநகராக இருந்த விஜயவாடாவை மாற்றி, அமராவதியை தலைநகராக முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப்பட்டினம் என மாற்றம் செய்து, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.
* சென்னையில் மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று மதியம் நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.