அண்ணா தொழிற்சங்கத் தேர்தல் : அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

Anna Trade Union Election AIADMK Coordinators Announcement

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல், 5 கட்டங்களாக நடைபெறும் என்று அதிமுக தலைமை  அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :

கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாக, 

வருகின்ற 14.08.2021, 22.08.2021, 29.08.2021, 07.09.2021 மற்றும் 17.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான கால அட்டவணை இத்துடன் வெளியிடப்படுகிறது.

அதேபோல், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளில் தேர்தல்களை நடத்துவதற்காக, தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பணிமனைகளின் தேர்தல் ஆணையாளர்களாகக் கீழ்கண்டவர்கள், கீழ்கண்டவாறு நியமிக்கப்படுகிறார்கள்.

ஆகவே, கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை முறைப்படி நடத்துவதற்கு, முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story