'எடப்பாடி புத்தகத்தில் இடம் பிடித்த அண்ணாமலை..' : ஓபிஎஸ் தரப்பு கேள்வி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் எழுப்பியுள்ள செய்திக்கேள்வி வருமாறு :
'அண்ணாமலை ஒரு மனநோயாளி; வேவு பார்க்கும் சந்தேகப் பிராணி; அண்ணாமலை ஒரு 420;
அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் திரைமறைவில் பேரம் நடத்துகிறார். அண்ணாமலையால் தமிழ் நாட்டுக்கே கேடு.
அண்ணாமலை குறித்து, பல ரகசிய தகவல்களை டெல்லிக்கு அனுப்பியுள்ளேன்' - எடப்பாடி கட்சியில் சேர்ந்த முன்னாள் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் நிர்மல்குமார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் இவை.
உதவிய அண்ணாமலைக்கு, எடப்பாடி ஏற்பாட்டிலான துரோகம்.
இருபதாயிரம் புத்தகங்கள் படித்த அண்ணாமலை, எடப்பாடியின் துரோகப் புத்தகத்தில் பிரதான பக்கங்களில் இடம் பிடித்திருக்கிறார்.
என்ன செய்யப் போகிறார்.. அண்ணாமலை..?
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.