நமத்துப்போன மிக்சர் மாநாடு: அண்ணாமலை விமர்சனம்..

By 
amalai8

சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு நமத்துப்போன மிக்சர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், என் மண் என் மக்கள் யாத்திரை அடுத்த 20 நாட்களில் துவங்க உள்ளது. 150 தொகுதிகளை கடந்துள்ளோம். மிகப்பெரிய எழுச்சியுடன் இந்த யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. புதியவர்கள், அரசியலில் நடுநிலையாளர்கள்  என்று நினைப்பவர்கள் குறிப்பாக சகோதரிகள் அனைவரும் தங்கள் யாத்திரையாக நினைத்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாத்திரை என்பது பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து யாத்திரைகளும் ஒரு படி மேலே உயர்த்தி விட்டு சென்றபோது, இந்த யாத்திரையின் வெளிப்பாடுதான் ராமர் கோவிலின்  பிரதிஷ்டை. அயோத்திக்காக பாரதிய ஜனதா கட்சி நம்முடைய துணை அமைப்புகள், அவர்களை ஒருங்கிணைத்ததாக இருக்கட்டும் இவை அனைத்தும் கட்சியை ஒரு படி மேலே கொண்டு போகும்.

நமது யாத்திரை அரசியல் மாற்றம் வேண்டும் என்று யாத்திரை. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை படம் பிடித்து காட்டுகிறோம். அனைத்து ஊருக்கும் சென்று அங்கே மக்களை சந்திக்கிறோம். யாத்திரை என்பது ஒரு நேர்கோட்டு பயணமாக இருக்கும். ஆனால் நமது யாத்திரை பட்டி தொட்டி சென்று விவசாய நிலம் வரைக்கும் சென்று சின்ன சின்ன ஊர்களுக்கும் சென்று மக்களை சந்திக்கிறோம். கட்சியின் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

இங்கு மிகப்பெரிய எழுச்சி தமிழகத்தில் உருவாகியுள்ளது.  இதனால் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும் திண்டுக்கல் காவல்துறை கொடுத்துள்ள கடிதங்களை நீதிமன்றத்தில் வைத்துள்ளோம். இவை அனைத்தையும் மீண்டும் விசாரணைக்கு எடுப்போம் என நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த ஊரில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதனால் பிரார்த்தனை செய்யக் கூடாது என்ற மிக மிக மோசமான முன்னிலைப்படுத்தக்கூடிய ஒரு நோக்கத்தை தமிழக அரசு எடுத்துள்ளது.

தங்கை கொடியேற்ற, அண்ணன் முழங்க மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இப்படி தான் சொல்ல வேண்டும். திமுக எம்எல்ஏவின் மகன் வீட்டிற்கு எப்படி வந்தேன், என்ன கொடுமை நடந்தது, 16 ஆயிரம் பேசி ஐந்தாயிரம் கொடுத்தார்கள். மோசமான அரிசி கொடுத்தார்கள், என்னை அடித்தார்கள். என பார்ப்பவர்கள் கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு அந்த சிறுமி பேசியது.  

பல்லாவரம் பகுதியில் பிற்படுத்தப்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த பெண்ணுக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. நானும் காவல்துறையில் பணியாற்றி இருக்கிறேன். அடுத்து அவர்களின் செயல்பாடு என்ன இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஒரு நபர் கொலை செய்யப்பட்டார். ஒரு மாதம் கைது செய்யப்படவில்லை நீதிமன்றத்தில் சென்று முன்ஜாமின் வாங்கிய பிறகு அவரை கைது செய்து வெளியில் விட்டார்கள்.

இதுதான் திமுகவின் நாடகம். ஆனால் பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் உடனடியாக காவல்துறை வந்து கைது செய்து விடுவார்கள். இந்த குழந்தை பாஜகவின் கொடி எங்கள் வீட்டில் ஏற்றுகிறார்கள் எனக் கூறியிருந்தால், இந்நேரம் நேரம் காவல்துறை சென்றிருக்கும் என்றார்.

Share this story