ஜெயிலுக்கு போறீங்களா? பாஜகவுக்கு போறீங்களா? : கெஜ்ரிவால் விமர்சனம்
Thu, 30 Mar 2023

டெல்லி சட்டப்பேரவையில் அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது :
அமலாக்கப் பிரிவினரும், சிபிஐ அதிகாரிகளும் யாருக்கு எதிராக சோதனை செய்கிறார்களோ, அவர்களது நெத்தியில் துப்பாக்கியை வைத்து, ஜெயிலுக்கு போறீங்களா? அல்லது பாஜகவுக்கு போறீங்களா என மிரட்டுகிறார்கள் என விமர்சனம் செய்தார்.
மோடி பிரதமர் பதவியில் இல்லாத போதுதான், இந்திய ஊழல் இல்லாத நாடாக மாறும் எனக் குறிப்பிட்டுள்ள கெஜ்ரிவால்,
எப்போது ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்களோ, அன்று பாஜகவினர் எல்லாம் சிறையில் அடைக்கப்படுவார்கள், நாடு ஊழல் இல்லாத நாடாக மாறும் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
*