மாணவர்கள் மீது தாக்குதல் : முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

mkst2

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திரா காந்தி தேசிய பழங்குடியினப் பல்கலைக்கழகத்தில் கேரள மாணவர்கள் மீது அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடைய பாதுகாப்புப் பணியாளர்களே தாக்குதல் நடத்தியுள்ள வன்செயலுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதும், தாக்குதல் நடத்தப்படுவதும் அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய அரசு தலையிட்டு இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

Share this story