புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் : மக்கள் நல்வாழ்வுத்துறை வேண்டுகோள்

By 
Avoid New Year's Eve Celebration People's Welfare Appeal

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம் என்று தமிழக மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 'தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில், 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

அதன் முடிவுகள் வந்த பின்னரே, எத்தனை பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் தெரியவரும். 

தமிழகத்தில், இரவு நேர ஊரங்கு தொடர்பாக டிசம்பர் 31 ஆம் தேதியன்று முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தெரிய வரும். கடந்த சில தினங்களாக சென்னையில் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

மக்கள் இடையே முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்து விட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 

நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தால், கண்காணிக்கப்படும். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம்' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
*

Share this story