வலது கையில் கட்டு; தாங்கி.. தாங்கி நடக்கும் சவுக்கு சங்கர்.! - பலத்த போலீஸ் பாதுகாப்போடு நீதிமன்றத்தில் ஆஜர்..

By 
savukku4

கஞ்சா வைத்திருப்பதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது கையில் முறிவு ஏற்பட்டு கட்டு போட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பெண் காவலர்களை தவறாக விமர்சித்த வழக்கில், சவுக்கு சங்கர் கடந்த சனிக்கிழமை தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரது காரில் சோதனை செய்த போது 400 கிராம் கஞ்சா இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், கோவை சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கரை போலீசார் தாக்கியதாகவும், உடல் முழுவதும் காயம் ஏற்பட்டதாக அவரது வழக்கறிஞர் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, பலத்த போலீஸ் பாதுகாப்போடு வந்த அவருக்கு  கையில் முறிவு ஏற்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் சரியான முறையில் நடக்க முடியாமல் சிரமப்படுவது போல் தாங்கி நடந்தார்.

சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் அமைப்பு நீதிமன்றத்திற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this story