பிரதமர் மோடிக்கு, பூடான் நாட்டின் மிக உயரிய விருது அறிவிப்பு
 

Bhutan's highest award announcement to Prime Minister Modi

பூடான் நாட்டின் தேசிய தினமான இன்று பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'நகடக் பெல் ஜி கோர்லோ' வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பூடானின் தேசிய தினத்தை முன்னிட்டு, தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் லோடே ஷேரிங் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது :

பிரதமர் மோடி விருதுக்கு மிகவும் தகுதியானவர். பூடான் மக்களிடமிருந்து வாழ்த்துகள். 

அனைத்து தொடர்புகளிலும் உன்னதமான, ஆன்மிக மனிதனாக மோடி பார்க்கப்படுகிறார். கவுரவத்தை நேரில் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்.
 
மிக உயரிய சிவிலியன் விருதான நகடக் பெல் ஜி கோர்லோவுக்கு, நரேந்திர மோடியின் பெயரை உச்சரிக்கும்போது மகிழ்ச்சி அடைந்தேன். 

பல ஆண்டுகளாக, குறிப்பாக  கொரோனா தொற்றுகளின்போதும் மோடியின் நிபந்தனையற்ற நட்பும், ஆதரவும் நீடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
*

Share this story