ஒரு இனத்தை அழித்து அரசாங்கம் பணத்தை பெருக்கலாமோ? : மருது அழகுராஜ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :
ஒரு மணிநேரம் போதுமே :
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை, பொம்மை முதலமைச்சர் என்கிறார் எடப்பாடி. ஆமா..சொல்றாரு...
இவரு என்ன பண்ணனும்.. நான் உக்கிரமான உண்மை முதலமைச்சர் என்பதை நிரூபிக்க ஒரு மணிநேரம் போதுமே..
கொடநாடு சம்பவத்தில், ஓம் பகதூர் என்கிற நேபாள நாட்டு கூர்க்கா கொலை செய்யப்பட்ட போதும், உயிர் தப்பித்துப் போன கிருஷ்ண பகதூர் என்கிற மற்றொரு கூர்க்கா கண்ணால் பார்த்த சாட்சி தானே..
காவல் துறையை அனுப்பி, அவரை கூட்டி வந்து விசாரிச்சா போதுமே.. ஏன் இதை செய்ய தாமதம்.. நான் பொம்மை இல்லை உண்மை என்று நிரூபிக்க.? இது போதாதா..
மாங்கல்யம் காப்பதே மிகவும் முக்கியம் :
பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, குடியால் அழியும் தமிழகத்தை மீட்கா விட்டால், ஒரு இனத்தையே
அழித்த பாவத்தை இரண்டு திராவிட கட்சிகளும் செய்ததாகி விடும்.
கொரோனா முழு அடைப்பின்போது, மதுவை மறந்து மக்கள் வாழப் பழகிய நிலையில், முன் கூட்டியே மதுக்கடைகளை திறந்து விட்டு மறந்ததை விட்டு மறுபடியும் குடிக்க வாருங்கள் என கூவி அழைத்த குற்றவாளி எடப்பாடியும் தான்.
அப்போது, வாயில் கருப்பு துணிகட்டி போராட்டம் நடத்திய விடியல் கம்பெனி இப்ப.. டாஸ்மாக்கை மூடாம தானியியங்கி மதுவிற்பனை செய்யலாமா.?
மாதம் ஆயிரம் மகளிருக்கு கொடுப்பதை விட அவர்களது மாங்கல்யம் காப்பதே மிகவும் முக்கியம். அரசுக்கு வருவாய் பெருக்க ஆயிரம் வழிகள் இருக்க.. ஒரு இனத்தை அழித்து அரசாங்கம் பணத்தை பெருக்கலாமோ... முடிவெடுங்க முதல்வரே.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் வலியுறுத்தியுள்ளார்.