அனைத்துப் பொதுக்கூட்டங்களும் ரத்து : காங்கிரஸ் அறிவிப்பு

Cancellation of all public meetings Announcement by Congress

உத்தரப் பிரதேசத்தில், இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில், அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

நாங்களும் சண்டையிடுவோம் :

இதையடுத்து, பரேய்லி மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சி தலைமையில்,  ‘பெண்கள் நாங்களும் சண்டையிடுவோம்’ என்ற பெயரில் மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

மாரத்தான் நிகழ்ச்சியின் போது, பெண்கள் பலரும் முகக்கவசம் அணியவில்லை, 

மேலும், சிலர் கூட்ட நெரிசலில் தடுக்கி விழுந்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

அறிவிப்பு :

இதையடுத்து, கொரோனா அதிவேகமாகப் பரவும் சூழலில், உ.பி.யில் நடைபெற இருந்த அனைத்துப் பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

அம்மாநிலம் முழுவதும் நடைபெற இருந்த 8 பொதுக்கூட்டங்களும் நடைபெறாது என தெரிவித்துள்ளது.

மேலும், நொய்டாவில் பாஜக சார்பில் நாளை நடைபெற இருந்த  பொதுக்கூட்டத்தையும் ரத்து செய்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Share this story