கஞ்சா வைத்திருந்த விவகாரம்; சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் - நீதிமன்றம் உத்தரவு

By 
savukku6

பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காரணத்திற்காக தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை காவல் துறையினர் கைது செய்தனர்.

காவல் துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது அவரிடம் கஞ்சா இருந்ததாகக் கூறி அவர் மீது கூடுதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை 7 காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி தேனி மாவட்ட PC பட்டி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்  நீதிபதி செங்கமலச்செல்வன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்ட நிலையில், மருத்துவபரிசோதனைக்கு பின்னர் மீண்டும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி செங்கமலசெல்வன் உத்தரவிட்டார். காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்த நிலையில் பெண் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

Share this story