விஜயகாந்த்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
 

By 
Chief Minister MK Stalin's meeting with Vijayakant

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்றார்.  விஜயகாந்த்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். 

மேலும், கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் விஜயகாந்த் வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன், எம்பி ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர். 

விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்து சென்றார். 

Share this story