முதலிடம் பெற்றது 'சின்னத் தத்தி' உதயநிதி தான் - திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் விளாசல்..

By 
kuru7

பரபரப்பான நாடாளுமன்ற அரசியல் சூழ்நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக, நடிகர் சிங்கமுத்து, திரைப்பட இயக்குனரும், நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் அன்பழகன், ஆகியோர் ஆற்றூர் - முல்லைவாடியில் வாக்கு சேகரித்தனர். உடன் ஆற்றூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன், நகர செயலாளர் மோகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

வாக்குச்சேகரிக்கும் பணியில் பொதுமக்களிடம், திரைப்பட இயக்குனரும் அஇஅதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது :

'இந்த நாடாளுமன்றத் தேர்தலில், மிக அதிகமாக உளறியதில் முதலிடம் பெற்றது 'சின்னத் தத்தி' உதயநிதி தான்.

ஜனநாயகம் ஓட்டு போடுவதற்கு தேர்தல் ஆணையம், எடப்பாடியார் அவர்களும்  சொன்ன நாள் ஏப்ரல் 19. ஆனால்,  உதயநிதி என்ற 'சின்ன தத்தி'  சொன்ன நாள் ஜூன் 19.

ஆக, இந்த சின்னத்தத்தியை தலைவராக ஏற்றுக் கொண்ட காங்கிரஸ்காரர்களும் மற்றும் கூட்டணி கட்சியினரும், உதயநிதி சொன்னது போல ,  ஜூன் 19ஆம் தேதி ஜனநாயக கடமையைச் செய்யுங்கள்.

ஆனால், தேர்தல் ஆணையம் கூறிய ஏப்ரல் 19ஆம் தேதி அன்று, பொதுமக்களும் நடுநிலையாளர்களும் அஇஅதிமுக. காரர்களும் கூட்டணி கட்சியினரும் வாக்களியுங்கள். 

அடுத்து வரும் ஜூன் 4-ஆம் தேதி ஓட்டுப்பதிவை எண்ணி விடுவார்கள். அதிமுகவும்- கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றிருப்பார்கள். 

உதயநிதியின் வேத வாக்குப்படி, அனைவரும் ஜூன் 19ஆம் தேதி ஓட்டு போடுங்கள். ஆனால், உங்கள் ஓட்டு எல்லாம் செல்லாத ஓட்டாக ஆகிவிடும்.

மொத்தத்தில், திமுக அமைச்சர்களின் உளறல் உச்சக்கட்டம். ஒன்றா இரண்டா ஏராளம்.!

சேலம் திமுக வேட்பாளர் செல்வக்கணபதிக்கு, ஒரு மூதாட்டியின் உணர்வு கூட புரியவில்லை.

' அய்யா.. தண்ணி வரலையா;  துணி துவைக்கணும்யா..' என மருகி கேட்கிறாள் பரிதாபத்துடன் மூதாட்டி.

அதற்கு செல்வகணபதி சொல்கிறார்,

' நான் வந்து துவைச்சு கொடுக்கட்டுமா?: என்கிறார்.

இந்நிலையில், திமுக அமைச்சர்களை பொதுமக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். இதனை, பொதுமக்களும் இணைய தளங்களில் வைரலானதை பார்த்திருப்பீர்கள். 

மொத்தத்தில், தமிழகத்தில் செயல்படாத ஸ்டாலினின்... 'போட்டோ சூட்' ஆட்சியில் காமெடிகள் தான் ஏராளம் தொடர்கின்றன.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்காக.., பெண்களை பொலீஸ் அதிகாரிகளாக ஆக்கினார்கள். ஆனால்,  இந்த விடியா ஆட்சியின் 'கோழை' ஸ்டாலினோ... மதுரையிலே பெண்களுக்கென மதுபான விடுதி திறந்து வைத்து, கோர்ட்டருக்கு 'வீரன்' என பெயர் வைத்திருக்கிறார். இவரெல்லாம், இந்தியாவை காப்பாற்ற போகிறேன் எனவும் பீற்றுகிறார். வெட்கக்கேடு.!

'துறைதோறும் ஊழல் புகழ்' முருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு, தமிழ்ப் பண்பாடு துளியும் தெரியவில்லை. 
எப்படி தெரியும்?

தாய்மார்களிடம் பேசும்போது கூட, கேவலமாய் பேசி, சந்தி சிரித்ததை பொதுமக்களே அறிவீர்கள். அந்த வகையில், அனைத்து பெண்களையும் தாய்க்குலமாய் மதித்து வணங்கி, வளர்த்து, வரவேற்பது.. அஇஅதிமுக மட்டும் தான்.

இது, எட்டாம் வள்ளல் புரட்சித் தலைவரின் ஒப்பற்ற இயக்கம்; புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்த பேரன்பு இயக்கம்.! 

எனவே, எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அஇஅதிமுக வெல்வது நிச்சயம்.!

இந்த நாடாளுமன்றத் தேர்தலில்... 'தேறாது திமுக.! வென்று நின்று நிலைக்குமே அதிமுக.!' என நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசினார்.

 

Share this story