சரியான பிரதமர் வேட்பாளர் தேர்வு; காங்கிரஸ் தொண்டர்கள் கருத்து..

By 
congress1

வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் மோடிக்கு சவாலாக இருக்கும் ஒரே பிரதமர் வேட்பாளராக அவர் இருப்பார் என்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த குழப்பம் இருந்துவரும் நிலையில் பிரதமர் வேட்பாளராக மல்லிகாஜூர்னே கார்கேவை தேர்வு செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.

ஆனால் நாடு முழுவதிலும் பிரபலமாக உள்ளவர் என்றால் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மட்டுமே என்றும் ராகுல் காந்தியை ஏற்க சில கட்சிகள் மறுப்பதால் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மோடிக்கு எதிராக இந்தியா முழுவதும் தெரிந்த ஒரு பிரபலமான முகம் பிரபல வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மட்டுமே வெற்றிக்கு வாய்ப்பு என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இதனை இந்தியா கூட்டணி கட்சியினர் ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this story