ஓபிஎஸ் நடத்தும் மாநாடு; தொண்டர்களிடம் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் பெருகி வருகிறது ஆசி.. 

opsmeeting

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள  மூன்று  செய்திக்குறிப்புகள் வருமாறு :

* மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல், மருத்துவர்களுக்கு  உணவு தங்குமிடம் வழங்கியதில் ஊழல், ஆக.. எடப்பாடிக்கும் விஜயபாஸ்கருக்கும் விரைவில் சிறைக்கு சீர் கொண்டு போகும் காலம் சீக்கிரம் வரும்.

* சொத்துப்பட்டியல் வெளியிடுவேன்னு அண்ணாமலை சொன்னதுமே.. எடப்பாடியின் டெண்டர் பாய்ஸ்.. நண்டை புடிச்சி டவுசருக்குள்ள விட்டாப்ள குதிக்காறுனுக..

அதுலயும், கடந்த கால ஆட்சிகளில் மத்திய அரசின் திட்டங்களில் கை வச்ச ஆட்கள விடமாட்டோம்னு சொன்னதுமே.. ஸ்மார்ட் சிட்டி நிலக்கரி கொள்முதல் போன்ற விவகாரங்களில் தொடர்புடைய "பெல் பாய்ஸ்" இருவரும் பா.ஜ.க.வில் சேர்ந்து பாவமன்னிப்பு பெறுவதற்கு முடிவெடுக்க போறாங்களாம்.

* உத்தமத்தலைவர் ஓ.பி.எஸ்.ஸின் திருச்சி மாநாடு பிரம்மாண்ட வெற்றி காண வேண்டும் என்னும் ஆர்வமும் ஆசியும் தொண்டர்களிடம் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

இதற்கு காரணம்.. ஒன்று அவர் அம்மாவின் அடையாளம் என்பதும், சமகால அரசியலில் பதறாத பண்பு கொண்ட அதிகபட்ச நல்லவர் என்பதுமே.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story