காங்கிரஸ் நம்பிக்கை முடியும் இடம் தான், என்னுடைய உத்தரவாதம் தொடங்கும் இடம்: பிரதமர் மோடி

By 
rajas1

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் நம்பிக்கை எங்கே முடிகிறதோ அங்கிருந்துதான் மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொய்யான வாக்குறுதிகளையும் விட, மோடியின் உத்தரவாதம் மேலானது என்று காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கோ, அல்லது பழங்குடியினருக்கோ, ஏழைகளுக்கோ சொந்தமானது அல்ல என்றும் அது ஒரு குடும்பத்திற்கு சொந்தமானது என்றும் தெரிவித்தார்.

மேலும் ராஜஸ்தானில் தவறான ஆட்சி செய்யும் காங்கிரஸ் ஆட்சியை மாற்ற ஜனநாயகம் உங்களுக்கு ஒரு வாய்ப்பளித்துள்ளது என்றும்  இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள் என்றும் மத்திய அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்த காங்கிரஸ் அரசை அகற்றுவது அவசியம் என்றும் மக்களின் கனவே எனது தீர்மானங்கள், அதை நிறைவேற்ற தடையை நீக்குங்கள் என்றும் பேசினார்.

Share this story