114 இடங்களில் காங்கிரஸ் வெற்றி; கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

kaisi

இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்துள்ளது.

கர்நாடாகவில் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கர்நாடகா தேர்தல் வெற்றிக்கு பிறகு சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கர்நாடகா முதலமைச்சர் யார் என்பதை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வதன் அடிப்படையில் கட்சி மேலிடம் முடிவு செய்யும். பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு கர்நாடக மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். பண பலத்தால் ஆட்சியை பிடிக்க முயன்ற பா.ஜ.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளனர்.

20 முறை பிரதமர் மோடி இங்கு வந்து பிரசாரம் செய்தும் தோல்வியடைந்துள்ளனர். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கர்நாடக வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நன்றி என்று கூறிய சித்தராமையா, பாராளுமன்ற தேர்தலில் வென்று ராகுல் காந்தி பிரதமராவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

Share this story