மனசாட்சி கொண்ட தொண்டர்களும் மக்களும் போதும் : ஓபிஎஸ் தரப்பின் தர்மவேதம்..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ், தொலைநோக்கு சிந்தையுடன் வெளியிட்டுள்ள தீர்க்கமான தெளிவுரை வருமாறு :
கொடநாடுல, கொலை கொள்ளையே நடக்கல; நாலாயிரத்து ஐநூறு கோடிக்கு டெண்டர்ன்னு ஒன்னே நடத்தல.
எடப்பாடி கட்சியை அபகரிக்கல; நிலக்கரி காணாமல் போகல; ஊழல்னு ஒன்னு, தமிழக எல்லைக்குள்ளேயே
இருக்கல; அட குட்காவே விற்கல போ..
ஆக, எடப்பாடி ஆட்கள் வருமானத்துக்கு அதிகமா சொத்து ஏதும் சேர்க்கல..
ஆம், மகாத்மாவின் மறுவடிவமான எடப்பாடி மீது போடப்பட்ட மற்றும் போடப்போகும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி..
குறிப்பு : "பசிக்கு வடை திருடியவருக்கு பத்து மாதம் சிறை"
எல்லாவற்றையும் மனசாட்சி கொண்ட தொண்டர்களும் மக்களும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தரப்போகும் தீர்ப்பு; அபகரிப்பு எடப்பாடிக்கும் அதனை கடந்துபோகும் நீதிமான்களுக்கும் நிச்சயம் தலைகுனிவை தந்தே தீரும்.
எடப்பாடி கம்பெனிக்கு, ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் முன்மொழிந்த தீர்ப்பையே, ஒட்டு மொத்த தமிழகமும் வருங்காலத்தில் வழிமொழிய காத்திருக்கிறது.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.