கொரோனா தொற்றில், ஈவிகேஎஸ். இளங்கோவன் நிலை என்ன? : மருத்துவமனை அதிகாரப்பூர்வ தகவல்..
 

evkse3

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான கொரோனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் ,செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என தகவல் வெளியானது .

இந்நிலையில், தற்போதைய மருத்துவ பரிசோதனையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கோவிட் நெகட்டிவ் என வந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Share this story