கவுன்டவுண் ஸ்டார்ட்ஸ் :ஓபிஎஸ் தரப்பு எனர்ஜி..

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கவிதைச்செய்தி வருமாறு :
* அருகம் புல்
அல்ல
நாம்
ஆலமரம்
என்பதை
உலகுக்கு
சொல்ல
உகந்த வேளை
வந்தது;
பூப் பாதை
விட்டு
சிங்கப்பாதை
தொடர்ந்து ,
பணியாத
செல்வம்
என்பதை
பகைக்கு
உணர்த்தவே
உகந்த தருணம்
உதித்தது.
* விரோதம்
துரோகம்
ஒரு சேர
இரண்டுக்கும்
ஓங்கி அடி
கொடுத்திட
தகுந்த காலம்
பிறந்தது;
நாம் இல்லா
இடம்
அது நடமாட
முடியாத
ஜடம் என்பதை
எடுத்துச்
சொல்லிட
ஏற்ற நேரம்
வந்தது.
* தேய்தல்
வளர்தல்
திங்களுக்கு
உண்டு,
மறைந்து
எழுவது
கதிரவனுக்கு
உண்டு..
ஆனால்,
நிலையான
வானம் நாம்
நிகரில்லா
மானம் என்பதை
சலருக்கும்
புரிய
வைக்க
சந்தர்ப்பம்
வந்தது.
* பெல்ட் பெல்ட்
என்று பேசும்
பில்டப்
பேர்வழிகளுக்கு
எல்லோருக்கும்
பெல்ட் இருக்கு
என்பதனை
நாமும் உணர்த்திடும்
நல்வாய்ப்பு
துவங்குது,
கிள்ளி வீசிட
நாம்
ஒன்றும்
மல்லித்தழை
இல்லை என
மார் தட்டி
சொல்லிடும்
போர்க்கோலம் ஒன்று
புறப்பாடு
புரியிது.
* விசுவாசம்
வீழாது
துரோகம்
ஒரு போதும்
வாழாது
என்பதனை
வரலாறாய்
சொல்வதற்கு
வாய்ப்பு
ஒன்று
மலருது.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.