தமிழகத்திற்கு உண்மையான விடியல் எப்போது தெரியுமா?: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளாசல்..

By 
raju

மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ;-

அதிமுக..  திமுக போல கட்சியை வைத்து பொழப்பு நடத்துகிற குடும்பம் இல்லை. புரட்சித்தலைவர் எங்களுக்கு கற்றுக் கொடுத்ததை போல் ரத்தம் வேர்வை சிந்தி உழைத்த பணத்தை வைத்து கூட்டம் நடத்துபவர்கள் தான் அதிமுக தொண்டர்கள். அதிமுகவை அழிக்க  ஸ்டாலின் இல்லை உதயநிதி இன்பநிதி இல்லை ஏன் உங்க அப்பா கருணாநிதியாலே அதிமுகவை அழிக்க முடியவில்லை, நீ எல்லாம் எம்மாத்திரம். ஆறுமுகம் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிற்கு தலைமை தாக்கியுள்ளார்.

அதிமுகவை  நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை. நம்பாமல் கெட்டவர்கள் தான் இந்த உலகத்தில் அதிகம்.  அடிப்படை தொண்டனாக இருந்து படிப்படியாக கட்சியில் முன்னேறி அம்மாவின் அன்பை பெற்று தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் பெற்று எடப்பாடி யார் நல்லாட்சி நடத்தி வந்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவை நினைவாக்கிய தமிழன் ஒரு முதலமைச்சர் ஆறுமுகம் கொண்ட நம் பழனிச்சாமி.

புரட்சி தலைவர், கருணாநிதி குடும்பத்தை பற்றி அன்றே பாடியுள்ளார் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று. இன்று ஆட்சி நடத்தி வரும் திமுக அனைத்திலும் கலெக்ஷன், கரப்ஷன் செய்து வருகிறது என விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் பேசிய அவர் மத்திய அரசுகள் எத்தனை ஐடி ரைடு நடத்தினாலும் போங்கடா நாங்கள் பார்க்காத திகார் ஜெயிலா 2 ஜீயா நாங்கள் செய்யாத  ஊழலா என மார்தட்டிக் கொள்பவர்கள் தான் திமுகவினர். அப்பாவும் மகனும் இருவரும் மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டு  ஆட்சி நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சியில் விலைவாசி, அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு மக்களை வஞ்சித்து வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று சகோதரி  கனிமொழி சொன்னார். ஆனால் தமிழகத்தில் இன்று மதுவால் நிறைய இளம் விதவைகள் இருக்கக்கூடிய ஒரு நிலை இருந்து வருகிறது. திமுக என்று வீட்டிற்கு செல்கிறதோ அன்றைக்கு தான் தமிழகத்திற்கு உண்மையான விடியல் என  செல்லூர் ‌ ராஜூ கூறியுள்ளார். 

Share this story