தேவை இல்லாமல் குழம்ப வேண்டாம் :நடிகை குஷ்பு கருத்து 

 

kushboo3

பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, எத்தனை நாள் தான் சீட்டுக்காக கூட்டணி கட்சிகளிடம் கைகட்டி நிற்பது? வருகிற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். கூட்டணி என்றால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார்.

இது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பல்வேறு யூகங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அண்ணாமலை பா.ஜனதாவின் மாநில தலைவர். அவர் ஒரு விஷயத்தை பற்றி பேசுகிறார் என்றால் யோசிக்காமல் பேச மாட்டார். டெல்லி தலைமைக்கும் தெரியாமல் இருக்காது. எனவே இந்த விஷயத்தில் தேவை இல்லாமல் குழம்பவும் வேண்டாம். மற்றவர்களை குழப்பவும் வேண்டாம். எல்லாவற்றையும் கட்சி பார்த்துக் கொள்ளும் என்பதே என் கருத்து.
 

Share this story