தவறானவர்களின் கையில் இரட்டை இலை சின்னம் : டிடிவி.தினகரன் பேச்சு

By 
ttvd2

சென்னையில் அமமுக பொதுச்செயலாள் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

2024 நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட எந்த தடையும் இல்லை. இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை .

இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரம் செய்து வந்தோம். குக்கர் சின்ன விவகாரத்தில் போதிய நாட்கள் இல்லாததால் நீதிமன்றம் செல்லவில்லை. இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது.

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொண்டர்களுக்கு தெரியும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

Share this story