எடப்பாடியும் ஏர்வாடியும் : மருது அழகுராஜ் விமர்சனம்

marudhu121

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு :

* ஒரு தொண்டன்கூட கட்சியின் தலைமைக்கு வரமுடியும்' என்கிறார் எடப்பாடி.

அப்படி எம்.ஜி.ஆர் வகுத்து வச்சிருந்த விதியைதான் மாத்தி, பத்து மாவட்ட பண்ணையாளர்கள் முன்மொழியனும். பத்து மாவட்ட ஜமீன்தார்கள் வழிமொழியனும்னு மாத்திட்டே பாம்பாட்டி..

* ஓ.பி.எஸ். மீது ஃபைல் திருடுனாருன்னு தரைப்பாடி பழி போட்டார்.

இப்ப என்னாச்சு.? இவர் மேல மொபைல் திருடுறாருன்னு வழக்கே வந்து போச்சு. ஆக.. ஃபைல்..க்கு மொபைல் சரியா போச்சா...

இதுதான், பிறருக்கின்னா முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே வரும் எனும் வள்ளுவன் வாக்கு, புரியுதா..

* 'இந்த கட்சியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்' என்கிறார் எடப்பாடி.

இவருதானே கட்சியை அழிக்க, கையில ஆசிட்டை தூக்கிக்கிட்டு அலையுறார்.

ஓ.பி.எஸ்.ஸை இவருதானே நீக்குனார். தி.மு.க.காரனா நீக்கியது?

அம்மாவை நீக்கி, அம்மா காட்டிய அடையாளத்தை நீக்கி, கட்சியை இவரே அழிக்குறார். அப்புறம்.. இவருக்கு இவரே சாபம் விட்டுக்குறார்.

இவரை வராதேன்னு போஸ்டர்கள் ஒட்டி, போராட்டம் நடத்துறதெல்லாம் தி.மு.க.காரன் இல்லை. எல்லாம் உண்மையான அம்மா தொண்டர்களும் எம்.ஜி.ஆரின் பக்தர்களும்தான். புரியுதா..

அதனால, அதிகாரப் பித்துப் பிடித்து அலையும் உன்னைய ஏர்வாடிக்கு கூட்டிக்கிட்டு போயி, அங்கேதான் பொதுச்செயலாளர் ஆக்கனும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

Share this story