எடப்பாடியும், ஏவல் ஆட்களும் : ஓபிஎஸ் தரப்பு தகவல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
எடப்பாடி கெட்டவன்தான்...ஆனா அந்த ஆளு பின்னாடி தானே நிர்வாகிகள் நிக்கிறானுக...பணம் இருக்கு...
டெல்லி வரைக்கும் லாபி செய்ய ஆளு இருக்குன்னு சொல்லி..
ஒரு தப்பான ஒருத்தன நீ தாங்கி பிடிப்பதும்... மது உயிருக்கு உடலுக்கு வீட்டுக்கு நாட்டுக்கு கேடுன்னு வாசித்துக் கொண்டே, அதை வாங்கிக் குடிக்கிறதும் ஒன்னுதான்..
புரட்சித் தலைவரின் கட்சியை ஒரு புற்று நோய் பற்றத் துடிக்கிறது..
தடுக்க போராடுபவன் எண்ணிக்கை, தடுக்கு விரிப்பவனின் கூட்டத்தை விட குறைவாக இருக்கலாம்.. ஆனால், காலம் சொல்லும்; நாம் நம் கடமையை சரியாக செய்தோம் என்று.
அவர்கள் மறைமுகமாக கரம் கோர்த்துக் கொண்டு.. காட்டிக் கொடுக்கும் துரோகிகளை கக்கத்தில் வைத்து
சி.வி.சண்முகம், ஜெயக்குமார், முனுசாமி போன்ற ஏவல் ஆட்களை வைத்து அவமானம் செய்வது..
ஓ.பி.எஸ். எனும் தலைவரை மட்டும் அல்ல.
இந்த புரிதல்.. 1957ல் காங்கிரஸை வேரோடு வீழ்த்தியது போன்ற ஒரு அரசியல் பிரளயத்தை இப்போதும் தொடங்கும்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.