எடப்பாடி பாவங்களும் எதிர் நிற்கும் சாபங்களும் : மருது அழகுராஜ்

By 
marudhu130

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கவிதைச்செய்தி வருமாறு :

மிஸ்டர் எடப்பாடி.. உம்மிடம் பல லட்சம் கோடி பணக்குவியல் இருக்கலாம். அதனை பாதாளம்வரை பாய்ச்ச பணியாட்கள் இருக்கலாம்.

அந்த பணத்துக்கு பல்லக்குத் தூக்க, பல நூறு பேர் பல்லிளித்து நிற்கலாம். காசுக்கு அலையும் கழிசடைகள் கைகட்டி நிற்கலாம்.

உன் கயமையை பெருமை என கதா கலாட்சேபம் செய்ய, வாய் வாடகை ஆட்கள் வரிசை கட்டி நிற்கலாம். நிதி கொண்டு நீதியை வளைக்கும் சதாசிவங்கள் முதல், சம்பந்திகள் வரை சப்புக்கொட்டி நிற்கலாம்..

நீ விலை வைத்து பிடிக்கும் தலைகள் உன் விலாசம் தேடலாம். வேலுமணி தங்கமணி என ஏராள Money -கள் உனக்கு எடுப்பாக இருக்கலாம்..

நாலரை வருடங்கள் நீ தீனி போட்டு வளர்த்த பிராணிகள் உனக்காக வாலாட்டி நிற்கலாம்..

ஆனால்... கொட நாட்டில் உயிர் விட்ட கூர்க்காவின் சாபம் .. காரோட்டி கனகராஜின் கண்ணீர் சாபம்.. தாயோடு இறந்த குழந்தையின் தாளாத சாபம்.. தீதொன்றும் அறியா தினேஷின் சாபம்..

இவற்றோடு அன்று.. பாதை நிலத்துக்கு நீ பலி கொடுத்த பங்காளிகள் சாபம்.. துப்பாக்கி ரவைகளால் பரலோகம் போன பதிமூன்று உயிர்களின் பரிதாப சாபம் என உன் அடுக்காத பாவங்களின் அறுவடைக் காலம் தொடங்கி விட்டது..

'இவற்றோடு, எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை எடப்பாடி என்ற நபர்க்கு' என்பது தான்.. உனக்கு சமூகம் விட்டிருக்கும் சாபம்..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story