எடப்பாடி அணி டெபாசிட் இழக்கும்: பாஜக அணியில் ஓபிஎஸ் திட்டவட்டம்..

By 
ela3

புதுச்சேரியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஓபிஎஸ் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,

“பாரதிய ஜனதா கட்சியில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறோம். முதலில் இருந்து, எல்லா தீர்ப்புகளும் எடப்பாடிக்கு தற்காலிகமான தீர்ப்பு‌ தான் வழங்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து நீடிக்கிறோம். பழனிச்சாமி தான் வெளியேறிவிட்டார் என்றார்.

மேலும் எடப்பாடியை யாரும் நம்பக்கூடிய சூழ்நிலையில் இல்லை என்றும், நல்லது செய்தவர்களுக்கு நன்றி இல்லாமல் நடந்து கொண்டதால் கட்சிகள் யாரும் அவரை நாடி செல்லவில்லை என கூறினார்.

மேலும் அண்ணாமலையை முதலில் விமர்சனம் செய்தது, எடப்பாடி அணி என்றும், அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி அணி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Share this story